» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.5,60,000 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 9:27:53 PM (IST)

விபத்தினால் இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூபாய் 5,60,000 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தூத்துக்குடியைச் சார்ந்த தனம் மற்றும் சந்திரா ஆகியோரின் மகனான சேவியர் பிரேம்நாத் என்பவர் தூத்துக்குடியிலுள்ள மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தின் தனி நபர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திருந்தார். அதன் பின்னர் அவர் ஒரு இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து செல்லும் போது விபத்துக்குள்ளாகி இறந்து விட்டார். அதன் பிறகு அவரது பெற்றோர்கள் முறையான ஆவணங்களுடன் இழப்பீட்டு தொகை கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளனர். 

ஆனால் முறையான காரணங்கள் இன்றி இழப்பீட்டு தொகையை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்த பெற்றோர்கள் உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் காப்பீடு இழப்பீட்டு தொகை ரூபாய் 5,00,000, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 50,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 5,60,000ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory