» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிய வகை சங்கு விற்பனை: 2 போ் கைது!

சனி 27, ஏப்ரல் 2024 8:23:31 AM (IST)



திருச்செந்தூரில் அரிய வகை தலைவால் சங்கை விற்பனைக்கு வைத்திருந்த 2பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மன்னாா் வளைகுடா கடலோரப் பகுதிகளில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்திடவோ வனத்துறை தடை விதித்துள்ளது. குறிப்பாக கடல் அட்டைகள், அரிய வகைச் சங்குகளை எடுக்கவோ, வைத்திருக்கவோ அனுமதி இல்லை. இந்நிலையில் திருச்செந்தூா் கடற்கரையில் அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை சங்குகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருச்செந்தூா் வனச்சரகா் கவின் தலைமையில் வனத்துறையினர் திருச்செந்தூா் அய்யாவழி கடற்கரையில் பகுதியில் நேற்று ரோந்து சென்றபோது, அரசு தடை செய்துள்ள 3 அரிய வகை தலைவால் சங்குகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக அமலிநகா் வடக்குத்தெருவை சோ்ந்த டிலைட்(53), தெற்குத்தெருவை சோ்ந்த ராஜன்(53) ஆகிய இருவரையும் கைது செய்து சங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் திருச்செந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory