» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மரங்கள் மக்கள் இயக்கம் சிறப்பு கூட்டம்

புதன் 8, மே 2024 7:10:47 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மரங்கள் மக்கள் இயக்கம் விளாத்திகுளம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரங்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் ஈர்க்கப்பட்டு மாசார்பட்டி கிராமத்தில் 30 நபர்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். மேலும், அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு பேர் சூட்டு விழாவும் நடைபெற்றது.

அதில் 15பேர் கொண்ட ஒரு குழுவிற்கு புங்கன் மரங்கள் மக்கள் இயக்கம் மகளிர் குழு மற்றும் வேம்பு மரங்கள் மக்கள் இயக்கம் மகளிர் குழு என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு மரங்கள் குறித்தான நன்மைகள் குறித்து அன்றாடம் ஒவ்வொரு மரத்தை எவ்வாறு பராமரிப்பது அதனால் என்ன பலன்கள் என பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

நிகழ்வில், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாத்துரை, மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி கார்த்திகை முருகன், ஒன்றிய துணை செயலாளர் பாலையா, ஊராட்சி மன்ற துணை தலைவர் மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக்குமார், கிளை செயலாளர்கள் சண்முகம், செல்லத்தாய் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஆனந்த்மே 9, 2024 - 10:54:06 AM | Posted IP 172.7*****

மரங்கள் வைத்து விட்டு பராமரிக்காமல் விடுவார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory