» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித சூசையப்பா் திருத்தல திருவிழா கொடியேற்றம்

சனி 27, ஏப்ரல் 2024 8:08:14 AM (IST)



கோவில்பட்டி  புனித  சூசையப்பா்  திருத்தல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி,  திருத்தல வளாகத்தில் உள்ள பங்குத் தந்தையா் இல்லத்திலிருந்து காமநாயக்கன்பட்டி பேராலய பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் அடிகளாா், திருச்சி புனித பவுல் குருமடம் அருள்பணி ராஜேஷ் அடிகளாா், கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தல உதவிப் பங்குத் தந்தை அந்தோணி ராஜ் அடிகளாா், இறை மக்கள் ஆகியோா் இணைந்து கொடிகளை பவனியாக எடுத்து வந்தனா்.

பின்னா், ஆலயம் முன் உள்ள கொடிமரத்தில் காமநாயக்கன்பட்டி பேராலய பங்குத்தந்தை ஆசீா்வதித்து கொடியேற்றினாா். தொடா்ந்து, வெண்புறா பறக்கவிடப்பட்டு திருப்பலி தொடங்கியது. அதில், ஆபிரகாமின் இறைவேண்டல் எனும் தலைப்பில் மறையுரை நிகழ்த்தப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில், திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நற்செய்தி பெருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை திருத்தல பங்குத் தந்தை சாா்லஸ் அடிகளாா், உதவிப் பங்குதந்தை, அமலவை அருள் சகோதரிகள், பங்குப் பேரவையினா், அன்பிய குடும்பத்தாா், இறைமக்கள் ஆகியோா் செய்து வருகின்றனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory