» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை : விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 12, ஜூலை 2022 3:08:17 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற்றிட விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1-ம்; வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.1000/- , 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3000/-, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4000/-, இளநிலை கல்விக்கு ரூ.6000/- மற்றும் முதுநிலை கல்விக்கு ரூ.7000/-மும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையோடு கூடுதலாக வாசிப்பாளர் உதவித் தொகை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.3000/-, இளநிலைகல்விக்கு ரூ.5000/- மற்றும் முதுநிலைகல்விக்கு ரூ.6000/-மும் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இவ்வலுவலகத்தில் பெற்று தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், UDID அட்டை நகல், மாணவர் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் பெயரில் உள்ள இணை சேமிப்பு கணக்கு வங்கி புத்தக நகல். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட சான்றுகளுடன் இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூததுக்குடி என்ற முகவரியில் விண்ணப்பிக்குமாறும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 0461-2340626-ல் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிககப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











Muthu lakshmi. KMar 15, 2025 - 11:32:41 AM | Posted IP 172.7*****