» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சி.சி.தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமசின் 214ஆம் ஆண்டு நினைவேந்தல்

சனி 22, ஜனவரி 2022 10:47:20 AM (IST)தூத்துக்குடியில் பரதகுல மக்களின் 16ஆம் மன்னராக இருந்த சி.சி.தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமசின் 214ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப் பல உதவிகளைச் செய்தவர் என்ற சிறப்புக்குரியவர் தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன். சிறையில் இருந்து தப்பி வந்த ஊமைத்துரைக்கு ஆயுதம் வழங்கி விடுதலைப் போராட்டத்திற்கு வலு சேர்த்தவர் தெக்குரூஸ் வாஸ் கோமஸ். நாட்டுக்காகத் தன் சொத்துகள் பலவற்றை வழங்கிய தெக்குரூஸ் வாஸ் கோமஸின் 214ஆம் ஆண்டு நினைவேந்தல் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலைக்கல்லூரியில் பயிலும் மீனவக் குழந்தைகளுக்கு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மீனவ மக்கள் கட்சியின் தலைவர் அலங்கார பரதர் தலைமை தாங்கினார். சேவியர், கனகராஜ், வழக்குரைஞர் ரஜினி மகி, எட்வின் பாண்டியன், நெய்தல் அண்டோ, கோல்டன் பரதர், பியோ பரதர், டெரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் அண்டன் பீரிஸ், மாமன்ற முன்னாள் உறுப்பினர் கோல்டன், அமலன், பிரபு ராயன், கடல்பாசறை பிரவீன், சசிகுமார், சேவியர், தினேஷ், அமலநாதன், அலாய், பிரவின், பிரிட்டோ, சைமன், வளன், கிராசிங்டன், வழக்குரைஞர் பிதேலிஸ், ஜேப் பிரின், அன்ட்ருஸ், அரவிந்த், ராஜா, நெவில், அமலன், கென்னடி, இனிகோ,கிறிஸ்டோ,ரெனால்ட் உட்பட மீனவ மக்கள் கட்சி, தமிழக மீனவ மக்கள் கட்சி, தமிழ் மீனவக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பனிமய மாதா பேராலய பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா கல்லறைகளை அர்ச்சித்தார். குரூஸ் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹெர்மென் கில்டு வரவேற்றார். நிகழ்வுகளை தேவானந்த் தொகுத்து வழங்கினார். நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கத்தின் செயலாளர் ஆழி புத்திரன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம், நெய்தல் எழுத்தாளர், வாசகர்கள் இயக்கத்தினர் இணைந்து செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory