» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வேன்-லாரி மோதல்: 4பெண்கள் பலி - 15பேர் படுகாயம்

வியாழன் 9, செப்டம்பர் 2021 7:59:57 AM (IST)தூத்துக்குடியில் தனியார் நிறுவன வாகனம் மீது தண்ணீர் லாரி மோதியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர். டிரைவர் உட்பட 15பேர் படுகாயம் அடைந்தனர். 

தூத்துக்குடி துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு உலர்பூ  தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், சில்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை 6 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக கிராமங்களில் இருந்து 18 பேரை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு ஓட்டப்பிடாரத்தில் இருந்து  உலர் பூ கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தது. சில்லாநத்தம் மெயின் ரோட்டில் வேன் சென்று கொண்டிருந்தபோது, நயினார்புரம் கிராமத்திலிருந்து புதியம்புத்தூர் நோக்கி வந்து வந்த தண்ணீர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது.

இவ்விபத்தில் புதியமுத்தூர் சில்லாநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் மனைவி செல்வராணி (45), ஓட்டப்பிடாரம் மூப் புலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சந்தியா (48) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து கிராம மக்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புதியம்புத்தூர் சில்லாநத்தம் மேலத்தெரு சேர்ந்த ரவீந்திரன் மனைவி காமாட்சி என்ற ஜோதி (40), நடுவக்குறிச்சியைச் சேர்ந்த அடைக்கலராஜ் மனைவி மணமேகலை (20) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்தது. 

மேலும் இந்த விபத்தில் லாரி டிரைவர் நயினார் புரத்தைச் சேர்ந்த சுப்பா மகன் பண்டாரம் (41), வேன் டிரைவர் புதியம்புத்தூர் கீழத் தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் பாபு (26), முப்புலிவெட்டியைச் சேர்ந்த செல்வ மாாரியப்பன் மனைவி பேச்சியம்மாள் (28), சில்லாநத்தம் கண்ணன் மனைவி ராமலட்சுமி (39), நடுவக்குறிச்சி அடைக்கலார்ஜ் மனைவி வணிதா (19), சில்லாநத்தம் முனியசாமி மனைவி பொன் இசக்கி (44), முப்புலிவெட்டி மாரியப்பன் மகன் செல்வமுருகன் (20), சில்லாநத்தம் சரவணகுமார் மனைவி லிங்கம்மாள் (27), முப்புலிவெட்டி பசுங்கிளி மனைவி சந்தனமாரி (35), இசக்கி மனைவி பகவதி (38) ஆகிய 10பேர் படுகாயம் அடைந்த சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் விபத்தில் லேசான காயம் அடைந்த 5 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடுதிரும்பினர். சம்பவம் குறித்து புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ரூரல் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் பார்வையிட்டனர். விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. 


மக்கள் கருத்து

பழனிSep 9, 2021 - 01:06:58 PM | Posted IP 162.1*****

புதியம்புத்தூர் _ தூத்துக்குடி சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் சாலை விதிமுறைகளையும் பின்பற்றவில்லை 1 கட்டுபடாற்ற வேகம்.2.செல்போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்குவது.3இரவில் அதிக ஒளிரும் விளக்குகளை பயன்படுத்துவது. .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest Cakes

Thoothukudi Business Directory