» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடற்பாசி பொருட்கள் தயாரிப்பு குறித்து 3 நாட்கள் பயிற்சி

சனி 31, ஜூலை 2021 11:38:24 AM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் "கடற்பாசி சேர்த்த அடுமனைபொருட்கள் தயாரிப்பு” குறித்து மூன்று நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "கடற்பாசி சேர்த்த அடுமனை பொருட்கள் தயாரிப்பு” தொடர்பாக மூன்று நாள் தொழில்நுட்ப செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டியல் இனசமூகம் மற்றும் பகுதி திட்டம் நிதியுதவியுடன் நடைபெற்றது. 

மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வளவிரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையும் மீன்பதனத் தொழில்நுட்பத்துறையும் இணைந்து நடத்திய இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சார்ந்த மொத்தம் 20 மகளிர் பயிற்சிபெற்று பயனடைந்தனர். மீன்வளக் கல்லூரி முதல்வர் (பொ),  சுஜாத்குமார், துவக்கிவைத்தார். 

மீன்பதன தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் பா. கணேசன், மற்றும் தலைவர், பயிற்சியாளர்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில்  மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் இரா. சாந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார். மேலும் கடற்பாசியின் முக்கியத்துவம், கிடைக்கும் இடங்கள் மற்றும் தொழில் முனைவோராகும் வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். 

இப்பயிற்சியில் பயிற்சியாளர்களுக்கு கடற்பாசி ரொட்டி, கேக் மற்றும் பிஸ்கட் செய்வது குறித்த செயல் விளக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஓளி, உதவிப்பேராசிரியர் கோ. அருள், நன்றியுரை ஆற்றினார். இப்பயிற்சியின் நிறைவுவிழாவில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியினை கல்லூரியின் முதல்வர் பொறுப்பு சுஜாத்குமார் தலைமைவகித்தார். நிறைவாக  மீன்பதனத் தொழில்நுட்பத்துறை உதவிப்பேராசிரியர் கணேசன் நன்றியுரைஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory