» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜவுளி கடை, நகைக்கடைகளை திறக்க அனுமதி அளிக்க எம்பவர் இந்தியா கோரிக்கை

சனி 12, ஜூன் 2021 3:16:34 PM (IST)

ஜீன் மாதத்தில் முகூர்த்த தினங்கள் அதிகமுள்ளதால் ஜவுளி கடை, நகைக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு   - எம்பவர் இந்தியா நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி  மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனு: தவிர்க்க முடியாத காரணங்களால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்றாலும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை குடும்ப சூழ்நிலை கருதி பொது மக்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

ஜீன் மாதத்தில் 13, 14, 16, 21, 23, 27, 28 ஆகிய தேதிகளில் சுப முகூர்த்த தினங்கள் உள்ளது. பெரும்பாலான வைபவங்கள் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவையாகும். ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கை கருத்தில் கொண்டு இது போன்று ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுப நிகழ்வுகளை பொது மக்கள் ஒத்தி வைத்துள்ளனர். ஒத்தி வைத்த இந்த நிகழ்வுகளை மீண்டும் இந்த வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் நடத்த பலர் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் செல்ல இபதிவு மற்றும் இபாஸ்கள் தேவைப்படுகின்றது. ஆனால் திருமண நிகழ்வுகளுக்கு இபதிவு மற்றும் இபாஸ்கள் பெறுவதற்கு தழிழக அரசின் இணைய தளத்தில் அதற்கான வழிமுறைகள் இல்லை. இதனால் திருமண வீட்டார்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

ஆகவே திருமணத்திற்கு ஆன்லைன் பதிவு மற்றும் இபாஸ்கள் பெறுவதற்கான வழிமுறைகளை அறிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலும் ஊரடங்கு தளர்வின் காரணமாக கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் ஏற்கனவே முழு ஊரடங்கால் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இப்படி சென்றவர்கள் தாங்கள் பணியாற்றிய இடங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ பதிவிற்கும் தற்போது இணையதளத்தில் வசதி இல்லை. ஆகவே குறைந்த பட்சம் தங்களது சொந்த வாகனங்களில் பணியிடங்களுக்கு திரும்பி செல்ல வழி முறைகளை அறிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். அதே போன்று தளர்வு அறிவிக்கப்படாத கடைகளான  ஜவுளி கடை, நகைக்கடை, பர்னிச்சர் கடை போன்றவற்றையும் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு ஒரு துறை வீதம் திறப்பதற்கு ஆணையிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory