» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடை செய்யப்பட்ட புகையிலைப் விற்பனை: வியாபாரி கைது

புதன் 5, மே 2021 8:27:52 AM (IST)

கோவில்பட்டி அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, பாண்டவர்மங்கலம் ஊராட்சி பகுதியில் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில் போலீசார் செந்தில்குமார், சரவணகுமார், ஆனந்த் அமல்ராஜ், முகமதுமைதீன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்தாக கோவில்பட்டி ராஜீவ் நகர் இ.பி காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (44) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam Pasumaiyagam

Black Forest Cakes







Thoothukudi Business Directory