» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: ஜன.10ம் தேதி டிரம்பிற்கு தண்டனை அறிவிப்பு

சனி 4, ஜனவரி 2025 11:28:19 AM (IST)

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு ஜன.10ம் தேதி நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கிறது. 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொன்லாடு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்தார். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் வரும் 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல்ஸ். இவர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். 

2006ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக ஸ்டோமி டெனியல்ஸ் குற்றஞ்சாட்டினார். மேலும், 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தன்னுடனான பாலியல் உறவு விவகாரத்தை வெளியே கூறிவிடக்கூடாது என்பதற்காக டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டெனியல்ஸ் தெரிவித்தார்.

அதேவேளை, தேர்தல் பிரசாரத்திற்கு திரட்டப்பட்ட நிதியில் இருந்து டொனால்டு டிரம்ப் போலி வணிக பதிவுகளை உருவாக்கி 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பணத்தை ஸ்டோமி டெனியல்சுக்கு கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் டிரம்பிற்கு எதிராக பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. 

இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு அடுத்த வாரம் கோர்ட்டு தண்டனை அறிவிக்கிறது. அடுத்த வாரம் 10ம் தேதி கோர்ட்டு தண்டனை அறிவிக்கப்படுகிறது.

தண்டனை அறிவிப்பின்போது டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் நேரிலோ, காணொளி காட்சி மூலமாகவோ ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு சிறை தண்டனை விதிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டு டிரம்ப் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக 20ம் தேதி டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அவர் மீதான வழக்கில் 10ம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory