» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்: உலக நாடுகள் அதிர்ச்சி

வெள்ளி 3, ஜனவரி 2025 5:15:13 PM (IST)

சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை மக்கள் மெல்ல மெல்ல மறக்க தொடங்கியிருக்கும் சூழலில், சீனாவில் இருந்து மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. human metapneumovirus (ஹெச்.எம்.பி.வி) மனித மெடப்னியுமோவைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்துள்ளது. அதேபோல தகன கூடங்களிலும் நெருக்கடி அதிகரித்துள்ளதாம். மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன. புதிதாக பரவும் ஹெச்.எம்.பி.வி வைரஸ் மட்டும் இன்றி இன்புளுயன்ஸ்சா ஏ, மைகோபிளாஸ்மா நிமோனியா, கொரோனா ஆகியவையும் பரவி வருவதாக சில நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

புதிய வகை வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் அவசரநிலை பிறப்பிப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. HMPV வைரஸ் என்பது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை காட்டும். அதாவது கிட்டத்தட்ட கொரோனாவுக்கு என்ன அறிகுறிகள் இருந்ததோ அதே அறிகுறிதான் இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கும் காட்டுகிறதாம். இந்த வைரஸ் நோய் பரவலை சீன சுகாரத்துறை அதிகரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக SARS-CoV-2 (Covid-19)என்ற எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- " சீனா பல வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இன்புளுயன்சா ஏ, ஹெச்.எம்.பி.வி, மைகோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட் 19 ஆகிய வைரஸ் பாதிப்புகள் உள்ளன. இதனால், மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிமோனியா பாதிப்பு அதிகரிப்பால் குழந்தைகள் மருத்துவமனையில் குறிப்பாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா பெருந்தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அடுத்த சில மாதங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பரவமால் தடுக்க ஊரடங்கு போடப்பட்டதால் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோயின. உலக நாடுகளை மிரள வைத்த இந்த கொரோனா பாதிப்பின் தாக்கம் தற்போதுதான் விலக தொடங்கியிருக்கும் நிலையில் மீண்டும் சீனாவில் புது வித வைரஸ் பரவுவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory