» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது: மக்கள் கோலாகல கொண்டாட்டம்!
செவ்வாய் 31, டிசம்பர் 2024 4:58:36 PM (IST)
உலகில் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது. கிரிபாட்டி தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புது வருட பிறப்புக்காக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். உலகில் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது. கிரிபாட்டி தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூசிலாந்து நாட்டில் புது வருடம் பிறந்து விட்டது. வண்ண வண்ண வான வேடிக்கைகள், பட்டாசு வெடிப்புகளுடன் மக்கள் அதனை வரவேற்று வருகின்றனர். நியூசிலாந்து நாடு முதலில் 2025-ம் ஆண்டை வரவேற்கும் நாடாக உள்ளது. அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியா புதுவருட பிறப்பை வரவேற்கும். அந்நாட்டின் சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்கள் புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபடும்.
தொடர்ந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும், அவற்றுடன் சீனா மற்றும் பிலிப்பைன்சும் அடுத்தடுத்த சில மணிநேரங்களில் 2025-ம் ஆண்டை வரவேற்கும். புது வருட பிறப்பை ஒட்டுமொத்த உலகமும் வரவேற்பதற்கு 26 மணிநேரம் எடுக்கும்.
இந்நிலையில், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள ஸ்கை டவரில் நள்ளிரவில் பட்டாசுகள் வெடித்து புதுவருட பிறப்பை மக்கள் வரவேற்றனர். எனினும், உலகில் 2025-ம் ஆண்டை முதன்முதலில் கிரிபாட்டி, டோங்கா சமோவா தீவுகள் வரவேற்றன. பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவுகளில் 2025-ம் ஆண்டு பிறந்தது. தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் இசை திருவிழாக்களும் நடைபெறும்.