» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை தமிழர்களுக்கு தலா ரூ.28 லட்சத்தில் 4,000 வீடுகள் கட்டித் தர இந்திய அரசு ஒப்பந்தம்!

வியாழன் 16, மார்ச் 2023 11:23:16 AM (IST)

இலங்கை தமிழர்களுக்கு தலா ரூ.28 லட்சத்தில் 4,000 வீடுகள் கட்டித் தர அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 

இது பிரதமர் மோடியின் மைல்கல் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா ரூ.28 லட்சம் மதிப்பில் 4,000 வீடுகள் கட்டித் தருவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகள் இடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில் இது ஒரு மைல்கல் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory