» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கொல்கத்தாவில் பழமையான டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

ஞாயிறு 29, செப்டம்பர் 2024 12:53:40 PM (IST)



கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது. 

150 ஆண்டுகால பழமையான டிராம் சேவையை நிறுத்துவது என்று மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் 1873-ல் அறிமுகமான டிராம், பிறகு நாசிக், சென்னை, நாசிக், மும்பையில் இயக்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் சென்று வர டிராம் உதவிகரமாக இருந்ததாக கொல்கத்தா நகர மக்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டிராம் சேவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 1873-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கொல்கத்தாவில் குதிரைகளைக் கொண்டு தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்படும் டிராம்கள் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. தொடர்ந்து பாட்னா, சென்னை, நாசிக் மற்றும் மும்பை போன்ற பிற நகரங்களில் டிராம்கள் ஓடத் தொடங்கின.

பின்னர் படிப்படியாக டிராம் சேவைகள் முடிவுக்கு வந்த நிலையில், சுமார் 150 ஆண்டுகளாக கொல்கத்தாவில் மட்டும் டிராம் சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட டிராம்கள், 1900-களில் மின்சார இன்ஜினாக மாற்றம் செய்யப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டில் குளிர்சாதன வசதி கொண்ட டிராம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றாகவே டிராம் சேவை விளங்கி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory