» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல் பங்கில் பயங்கர தீ விபத்து: 8 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்

வெள்ளி 20, டிசம்பர் 2024 12:49:35 PM (IST)

ஜெய்ப்பூரில்  பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  8 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்கில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது. ரசாயனம் ஏற்றிச் சென்ற லாரியில் பிடித்த தீ, அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவியது. இந்த பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.  30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல் பங்கில்  தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சந்திக்க முதல்-அமைச்சர் பஜன் லால் சர்மா மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory