» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மின்திருட்டில் ஈடுபட்டதாக எம்.பி.க்கு ரூ. 1.91 கோடி அபராதம்: மின்வாரியம் அதிரடி!
வெள்ளி 20, டிசம்பர் 2024 10:21:49 AM (IST)
உத்தர பிரதேசத்தில் மின்திருட்டில் ஈடுபட்டதாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியாஉர் ரஹ்மான் பார்க் மீது ரூ. 1 கோடியே 91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இவரது வீட்டில் இரண்டு மின் மீட்டர்களில் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து அம்மாநில மின்சாரத் துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச மாநில மின்சாரத் துறை அதிகாரிகள் எம்.பி.யின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, வீட்டில் உள்ள் மின்சாதனங்களை கணக்கெடுத்தனர். அப்போது மின் இணைப்பு சுமை எட்டில் ஒரு பங்காக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
எம்.பி.யின் வீட்டில் 50க்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள், டீப் ஃப்ரீசர், 3 ஸ்பிலிட் ஏசிகள், 2 ஃப்ரிட்ஜ்கள், ஒரு காபி மேக்கர், கீசர், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட கனரக மின்சாதனங்கள் வீட்டில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். எனினும், கடந்த 6 மாதங்களாக எம்.பி.யின் இல்லத்தில் மின்கட்டணம் பூஜ்ஜியமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
இது குறித்து அம்மாநில மின்சாரத் துறையின் வெளியிட்ட தகவல்களில், எம்.பி. ஜியாஉர் ரஹ்மான் 2 கிலோவாட் இணைப்பை எடுத்துள்ளார். அதேசமயம் சுமை 16.5 கிலோவாட் ஆகும். இரண்டு நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்ட புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் 5.5 கிலோவாட் மின் சுமையைக் காட்டியது.
மின் சுமை குறித்து விசாரித்த போது, வீட்டில் 10 கிலோவாட் சோலார் பேனல் மற்றும் 5 கிலோவாட் ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளதாக எம்.பி. ஜியாஉர் ரஹ்மானின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதை கொண்டு எம்.பி.யின் வீட்டில் 19 கிலோவாட் மின்சாரம் ஏற்ற முடியும். ஆனால், குடியிருப்பில் உள்ள சோலார் பேனல்கள் இயங்கவில்லை என மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்தார்.
அதன்படி மாவட்ட மின்சாரக் குழுத் தலைவராகவும் செயல்படும் சமாஜ்வாதி எம்.பி. ஜியாஉற் ரஹ்மானுக்கு எதிராக மின் திருட்டு தடுப்புச் சட்டம் பிரிவு 135ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, எம்.பி.யின் தந்தை மம்லுக் உர் ரஹ்மான், மாநில மின் துறை அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அரசுப் பணியைத் தடுத்ததாக பார்கின் தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தான்Dec 20, 2024 - 11:30:27 AM | Posted IP 162.1*****