» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் பாஜக எம்.பி.க்கள் காயம் : பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!

வியாழன் 19, டிசம்பர் 2024 3:28:56 PM (IST)



ராகுல் காந்தி தள்ளியதால் காயமடைந்தாக கூறப்படும் பாஜக எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், காங்கிரஸுக்கு எதிராக பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தினர். இதில், ராகுல் காந்தி தள்ளியதில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பாஜக எம்பிக்கள் தன்னை வழிமறித்து மிரட்டியதாக ராகுல் காந்தியும், கீழே தள்ளியதில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கேவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

பிரதாப் சிங் சாரங்கி காயமுற்றது தொடர்பாக பாஜக எம்பி லட்சுமணன் கூறுகையில், ”ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நமது ஒடிஸா எம்.பி.க்கு காயம் ஏற்பட்டது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சியும் அவமதித்து வருகிறது. நேருவால் அக்பேத்கர் காங்கிரஸில் இருந்து விலகினார். பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கருக்கு உரிய மரியாதையை வழங்கினார்” என்று கூறினார்.

பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு, போராட்டம் ஆகியவற்றால் நாடாளுமன்ற வளாகமே இன்று களேபரமானது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் மதியம் 2 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் கூடியது. அப்போது, அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory