» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

வெள்ளி 27, செப்டம்பர் 2024 11:38:01 AM (IST)

புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் நேற்று இரவு சென்றார். அவரை திமுக எம்பிக்கள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காவல் படையினர் மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

தமிழகத்துக்கு சமக்ரா சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிப்பது, சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதியை உடனே வழங்குவது, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வா் ஸ்டாலின் வழங்கினார்.

பிரதமருடனான சந்திப்பைத் தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த சீதாரம் யெச்சூரியின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் திரும்புகிறாா்.


மக்கள் கருத்து

Sep 27, 2024 - 12:27:44 PM | Posted IP 162.1*****

உதவாநிதிக்கு மொதல்வர் பதவியா ? அப்போ சரி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory