» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடி அரசால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பு: ராகுல் குற்றச்சாட்டு

வியாழன் 26, செப்டம்பர் 2024 5:02:51 PM (IST)

சில தொழிலதிபர்களுக்காக மோடி அரசு செயல்படுவதால் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ஹரியாணாவில் அஸ்ஸாந்த் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'பாஜக அரசினால் ஹரியாணா அழிந்துவிட்டது. நாட்டில் வேலைவாய்ப்பு முறையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் பிரதமர் மோடி.

சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு ஹரியாணாவைச் சேர்ந்த சில இளைஞர்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் இங்கு வேலைவாய்ப்பு இல்லாததால் அகதிகளாக அங்கு சென்றுள்ளனர். அவர்கள் ஏன் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும்? அவர்கள் தங்கள் சொந்த நிலங்களை விற்று 30-50 லட்சம் கொடுத்து அமெரிக்கா சென்றுள்ளனர்.

அந்த தொகையை வைத்து அவர்கள் ஹரியாணாவில் சொந்தமாக தொழில் தொடங்கலாம். ஏழையாக இருந்தால் பாஜக அரசு, வங்கிக்கடன் கொடுக்க மறுக்கிறது. நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் என அனைத்தும் அதானியின் வசம் உள்ளன. ஆனால் சிறு, குறு வணிகர்கள், ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பை எதிர்கொள்கின்றனர். சில தொழிலதிபர்களுக்காக மோடி அரசு செயல்படுவதால் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்கவில்லை. பதிலாக, பணக்காரர்களின் 16 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்தால் இங்குள்ள ஒவ்வொருவருக்காகவும் செயல்படுவோம்' என்று பேசியுள்ளார். ஹரியாணாவில் வருகிற அக். 5 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory