» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அசாமில் சீன போரின்போது வீசப்பட்ட பீரங்கி குண்டு கண்டெடுப்பு!
ஞாயிறு 1, செப்டம்பர் 2024 10:18:42 AM (IST)
அசாமில் இந்திய-சீனா போரின் போது வீசப்பட்ட பீரங்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது.
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோகபூர் கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள சீஷா ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் அங்கு வெடிகுண்டு போன்ற ஒரு பொருளை கண்டெடுத்தார். உடனடியாக அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 2 அங்குலம் நீளம் கொண்ட அந்த குண்டை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அது 1962-ல் இந்திய-சீனா போரின் போது வீசப்பட்ட பீரங்கி குண்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பீரங்கி குண்டை அவர்கள் பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர்.