» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதல் இடம்: 2-ம் இடத்தில் அம்பானி!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:53:38 AM (IST)
ரூ.11 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதல் இடத்தை பிடித்தார். 2-ம் இடத்தில் அம்பானி உள்ளார்.
ஹூருன் இந்தியா என்ற ஆராய்ச்சி நிறுவனம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியர்களின் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் 1,539 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 220 பேர் அதிகமாக உள்ளனர்.
இதில் குறிப்பாக 133 பேரின் ஒட்டுெமாத்த சொத்து மதிப்பு சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 272 பேர் இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளனர். 205 பேரின் சொத்து மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. 45 பேர் பட்டியலில் இருந்தே வெளியேறியுள்ளனர்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்த தொழில் அதிபர் அம்பானியை பின்னுக்கு தள்ளி, தொழில் அதிபர் அதானி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.11.61 லட்சம் கோடியாக உள்ளது. அம்பானி நிறுவனத்தில் பங்குகள் சமீபத்தில் சரிந்ததாக கூறப்பட்ட நிலையில், அதானி முதல் இடத்தை பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அடுத்த இடத்தில் அம்பானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.10.14 லட்சம் கோடியாக இருக்கிறது. 3-வது இடத்தில் தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஷிவ்நாடார் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.14 லட்சம் கோடியாக உள்ளது.
இந்திய பணக்காரர்களில் முதல் 10 இடங்களில் உள்ளவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-
1. அதானி - ரூ.11.61 லட்சம் கோடி.
2. அம்பானி - ரூ.10.15 லட்சம் ேகாடி.
3. ஷிவ்நாடார் - ரூ.3.14 லட்சம் கோடி.
4. சைரஸ் பூனாவாலா -ரூ.2.81 லட்சம் கோடி.
5. திலிப் சங்வி - 2.49 லட்சம் கோடி.
6. குமார் மங்கலம் பிர்லா - 2.35 லட்சம் கோடி.
7. கோபிசந்த் இந்துஜா - ரூ.1.92 லட்சம் கோடி.
8. ராதாகிஷன் தமானி - ரூ.1.90 லட்சம் கோடி.
9. அசீம் பிரேம்ஜி - ரூ.1.90 லட்சம் கோடி.
10. நீரஜ் பஜாஜ் - ரூ.1.62 லட்சம் கோடி.