» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணியிடங்களில் பாலியல் தொல்லை குறித்து பெண்கள் புகார் அளிக்க இணையதளம்

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:43:08 AM (IST)

பணியிடங்களில் நிலவும் பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் புகார் அளிக்க புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பணியிடங்களில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக ‘ஷீ-பாக்ஸ்’ (she-box) என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அதை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் பாலியல் தொல்லை குறித்து இந்த இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யலாம். புகார் என்ன நிலையில் உள்ளது என்பதை அவ்வப்போது பார்க்கலாம். புகார்களை கண்காணிக்க ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். காலவரையறையுடன் புகார்கள் கையாளப்படுவதை இது உறுதி செய்யும்.

பணியிடங்களில் பெண்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இதை காணலாம். பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவ இந்த நடவடிக்கை உதவும். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory