» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 5:16:33 PM (IST)
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அப்போது அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் 'பட்டியல் வகுப்பினர்' என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். நீதிபதி பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என்று அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்த சட்டமும் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 5:33:56 PM (IST)

உங்களை இந்தியாவில் சந்திக்க காத்திருக்கிறேன்: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:25:39 PM (IST)

கர்நாடகாவில் ரூ.275 கோடி போதை பொருள் சிக்கியது: 2 வெளிநாட்டு பெண்கள் கைது
திங்கள் 17, மார்ச் 2025 9:20:25 PM (IST)

டெல்லி பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
திங்கள் 17, மார்ச் 2025 5:34:02 PM (IST)

போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டு சிறை: புதிய குடியேற்ற மசோதாவில் தகவல்!
திங்கள் 17, மார்ச் 2025 12:21:45 PM (IST)

பாகிஸ்தானுடனான அமைதி முயற்சிக்கு துரோகமே பதிலாக கிடைத்தது: பிரதமர் மோடி
திங்கள் 17, மார்ச் 2025 12:14:58 PM (IST)
