» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முதியவர்கள், நோயாளிகள் பாதயாத்திரையாக வர வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்

சனி 26, அக்டோபர் 2024 5:05:06 PM (IST)



திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஸ்ரீவாரி மெட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருகிறார்கள். திருப்பதியில் ஆர்ஜித சேவை, ரூ 300 விரைவு தரிசனம், இலவச தரிசனம், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம் ஆகியவை உள்ளன. இதில் நடைபாதை தரிசனத்தில் அலிபிரி மலை பாதை வழியாகவும் ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாகவும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் மலைபாதை வழியாக தரிசனத்திற்கு வரும் பொதுமக்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுரை வழங்கியுள்ளது. 

அது குறித்த விவரம் வருமாறு: 60 வயதுக்கும் மேல் உள்ளவர்கள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டுவலி உள்ளவர்கள் பயணிக்க வேண்டாம். திருப்பதி தேவஸ்தானம் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். எனவே, இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்டவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல்பருமன், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் மலை ஏறுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். அதேபோல, நீண்டநாட்களாக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், பயணத்தின் போது தேவையான மருந்துகளை கைவசம் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. ஏதேனும் அவசர மருத்துவ சிகிச்சை வேண்டுவோர், கோவில் செல்லும் மலைப்பாதையில் 1500-வது படிக்கட்டு, கலிகோபுரம் மற்றும் பாஸ்கர்ல சந்நிதி இடங்களில் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவக் குழுக்களை அணுகலாம்.

திருமலையில் உள்ள மருத்துவமனையில் 24 மணிநேரமும் உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், கிட்னி தொடர்பான தொந்தரவுகளுக்கு சிகிச்சைகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory