» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இணையதள முகப்பு பக்கம் இந்தியில் மாற்றம் : எல்.ஐ.சி. நிறுவனம் வருத்தம்!!

செவ்வாய் 19, நவம்பர் 2024 5:01:49 PM (IST)



தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே இணையதளத்தில் இருந்தது என எல்.ஐ.சி. நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் வலைதளப் பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில், இன்று காலை அதன் இணையதள வலைதளப் பக்கம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கியது. மேலும் மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும், ஹிந்தி மொழியில் இருந்ததால் மொழி மாற்றம் செய்வதும் இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக அமைந்தது.

மொழி என்பதை குறிக்கும் "பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. எல்ஐசி வலைப்பக்கத்தில் இந்தி மட்டுமே இருந்ததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக கண்டனங்கள் எழுந்தன. இணையதளம் இந்தியில் இருந்ததற்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தி சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக எல்ஐசி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரிசெய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே இணையதளத்தில் இருந்தது. இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது. மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory