» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேசிய கல்விக்கொள்கை : மத்திய கல்வி அமைச்சருடன் ஆளுநர் ரவி ஆலோசனை!
புதன் 17, ஜூலை 2024 12:43:11 PM (IST)
டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த ஆளுநர் ஆர்.என். ரவி,தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் "மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழகத்தில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன். திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு நன்றி. இவ்வாறு ஆளுநர் ரவி கூறியுள்ளார்.