» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

7 மாநிலங்களில் 13 தொகுதி இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணி அமோக வெற்றி

சனி 13, ஜூலை 2024 4:40:09 PM (IST)

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட  7 மாநிலங்களில் 13 தொகுதி இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்கம் (4), இமாச்சல பிரதேசம் (3), தமிழ்நாடு (1), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), பீகார் (1), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 13 தொகுதிகளில் சுமார் 11 தொகுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகிறது.

ஏழு மாநிலங்களில் மத்திய பிரதேசம், உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். இந்த மூன்று மாநிலங்களில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 3 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் நான்கு தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாஜக-விடம் இருந்த மூன்று தொகுதிகளை தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இவர் இந்தியா கூட்டணியில் இடம் பெறவில்லை என்றாலும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அமர்வார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷா வெற்றி பெற்றுள்ளார். உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கே உள்ள இரண்டு தொகுதிகளான பத்ரிநாத் மற்றும் மங்க்லாயுர் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஒரு தொகுதியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கம்லேஷ் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில், பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார். இங்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

பீகாரில் நிதிஷ் குமார் கட்சி வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் முன்னிலை வகிக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜகவால் தனியாக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory