» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் முறைகேடு வழக்கு ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 11, ஜூலை 2024 4:32:29 PM (IST)
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது..
நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில், தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும் என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.