» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கண்ணியமாக நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:18:40 AM (IST)

இலவசங்களுக்கு பதில் கண்ணியமாக வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தலின் போது அர்த்தமற்ற இலவச வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரிப்பதைத் தடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மாநில அரசுகள் ஏற்கெனவே கடனில் தத்தளித்து வரும் நிலையில், இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் கடன் வாங்க வேண்டி இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இலவசங்களை விட கண்ணியமான வருவாய் ஈட்டக்கூடிய நலத் திட்டங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். உதாரணமாக, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் ஏழைகளுக்கு கண்ணியமான வருமானத்தை வழங்குகிறது. எனவே, வாக்குறுதிகள் மட்டுமே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்காது. இலவச வாக்குறுதிகள் வழங்கிய கட்சிகள் தேர்தலில் தோற்றதை பார்த்திருக்கிறோம்.

அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி வழங்குவதைத் தடுக்க முடியாது. ஆனால், எவையெல்லாம் அர்த்தமுள்ள வாக்குறுதிகள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. தண்ணீர், சில யூனிட் மின்சாரம் ஆகியவற்றை இலவசம் என கருத முடியுமா? மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட நுகர் பொருட்களை நலத்திட்டம் என்ற பெயரில் இலவசமாக வழங்கலாமா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை குறைப்பதற்காக நலத்திட்டங்களை அமல்படுத்த, அரசியல் சாசன சட்டத்தின் 38-வது பிரிவு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது. எனவே, இலவசங்களை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory