தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட்ஸ் மற்றும் ஐபிபிஎஸ் கிளார்க் வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்குகின்றன என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB, SSC, RRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது STATE BANK OF INDIA (SBI) - JUNIOR ASSOCIATES 9766 காலிப் பணியிடங்களுக்கு போட்டித்தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு செப்டம்பர் 26 மற்றும் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IBPS CLERK தேர்வுக்கான அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வு அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே வங்கிப் பணியாளர் தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 09.09.2026 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் Thoothukudi Employment Office என்ற Telegram சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. (SBI) JUNIOR ASSOCIATES, IBPS-CLERK போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.