தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (07.09.2026) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2026 -27 ஆண்டிற்கான நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆம் ஆண்டிற்க்கான மாவட்ட / மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, 09.09.2026 தொடர்ச்சியாக கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.3000, இரண்டாம் பரிசுதொகை ரூ.2000 மூன்றாம் பரிசுதொகைரூ.1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

பள்ளி அளவில் – தடகளம் ஆண் பெண் இருபாலர் 01.10.2026 அன்றும், இறகுபந்து - ஆண் பெண் இருபாலர் 09.09.2026 அன்றும், கேரம் ஆண் பெண் இருபாலர் 10.09.2026 அன்றும், சதுரங்கம் ஆண் பெண் இருபாலர் 11.09.2026 அன்றும், கபாடி ஆண்கள் 11.09.2026 அன்றும், பெண்கள் 12.09.2026 அன்றும், சிலம்பம் ஆண் பெண் இருபாலர் 11.09.2026 அன்றும், நீச்சல் ஆண்கள் 15.09.2026 அன்றும் பெண்கள் 16.09.2026 அன்றும், மேசைப்பந்து ஆண் பெண் இருபாலர் 10.09.2026 அன்றும், யோகாசானா ஆண் பெண் இருபாலர் 09.09.2026 அன்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்திலும்,

கூடைபந்து ஆண் பெண் இருபாலர் 09.09.2026 அன்றும், கிரிக்கெட் ஆண்கள் 10.09.2026 அன்றும், பெண்கள் 11.09.2026 அன்றும், வாலிபால் ஆண் பெண் இருபாலர் 09.09.2026 அன்றும், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியிலும்,

கால்பந்து ஆண்கள் 15.09.2026 அன்றும், பெண்கள் 11.09.2026 அன்றும் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,

கைப்பந்து ஆண்கள் 15.09.2026 அன்றும், பெண்கள் 16.09.2026 அன்றும் கோவில்பட்டி நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வளைகோல்பந்து ஆண்கள் 10.09.2026 அன்றும், பெண்கள் 11.09.2026 அன்றும் கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டு மைதானத்திலும்,

கோ – கோ ஆண்கள் 11.09.2026 அன்றும் பெண்கள் 12.09.2026 அன்றும் தூத்துக்குடி பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்பீடு ஸ்கேட்டிங் ஆண் பெண் இருபாலர் 15.09.2026 அன்று தூத்துக்குடி சிப்காட் பகுதியிலும் நடைபெறவுள்ளது.

கல்லூரி அளவில் – தடகளம் ஆண் பெண் இருபாலர் 30.09.2026 அன்றும், இறகுபந்து ஆண் பெண் இருபாலர் 21.09.2026 அன்றும், கேரம் ஆண் பெண் இருபாலர் 25.09.2026 அன்றும், கபாடி ஆண்கள் 23.09.2026 அன்றும், பெண்கள் 24.09.2026 அன்றும், சிலம்பம் ஆண் பெண் இருபாலர் 24.09.2026 அன்றும், நீச்சல் ஆண்கள் 15.09.2026 அன்றும் பெண்கள் 16.09.2026 அன்றும், மேசைப்பந்து ஆண் பெண் இருபாலர் 22.09.2026 அன்றும், யோகாசானா ஆண் பெண் இருபாலர் 19.09.2026 அன்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்திலும்,

கூடைபந்து ஆண் பெண் இருபாலர் 17.09.2026 அன்றும், கிரிக்கெட் ஆண்கள் 17.09.2026 அன்றும், பெண்கள் 18.09.2026 அன்றும், வாலிபால் ஆண் பெண் இருபாலர் 17.09.2026 அன்று தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியிலும்,

கைபந்து ஆண் பெண் இருபாலர் 24.09.2026 அன்று கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியிலும், வளைகோல்பந்து ஆண்கள் 22.09.2026 அன்றும், பெண்கள் 23.09.2026 அன்றும் கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டு மைதானத்திலும்,

ஸ்பீடு ஸ்கேட்டிங் ஆண் பெண் இருபாலர் 15.09.2026 அன்று தூத்துக்குடி சிப்காட் பகுதியிலும், பூப்பந்து ஆண் பெண் இருபாலர் 25.09.2026 தூத்துக்குடி மாநகராட்சி மைதானம், ஆசிரியர் காலணியிலும்,

சதுரங்கம் ஆண் பெண் இருபாலர் 25.09.2026 அன்றும், கால்பந்து ஆண்கள் 22.09.2026 அன்றும், பெண்கள் 23.09.2026 அன்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலும், நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரத்தின ராஜ் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.