தென்கிழக்கு வங்கக்கடலில் 13.11.2026 அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிப் புயலாக மாற வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள அனைத்து மீனவர்களும் 12.11.2026 அன்றைக்குள் கட்டாயமாகக் கரை திரும்புமாறு தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 13.11.2026 அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது தொடர்ந்து வலுப்பெற்றுப் புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்களின் பாதுகாப்பு கருதி, ஏற்கனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் வரும் 12.11.2026 அன்றைக்குள் கட்டாயமாகக் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வரும் 13.11.2026 முதல் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கு.அ.டிஷ்ரன் ஷர்மிளா உத்தரவிட்டுள்ளார்.

