தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் "Chutties for Cities - 2026" என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இன்று (11.11.2026) மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் 120 மாணவ-மாணவிகளும், ஓவியப் போட்டியில் 250 மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகள் விவரம்:
சுவர் ஓவியப் போட்டி (Wall Painting): நவம்பர் 12 காலை 10:00 மணிக்கு முத்து நகர் கடற்கரையில் நடைபெறுகிறது. இயற்கை வளங்கள், டெங்கு ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற தலைப்புகளில் ஓவியங்கள் வரையப்படும்.
வழக்காடு மன்றம் (Debate Competition): நவம்பர் 14 மாலை 6:00 மணிக்கு முத்து நகர் கடற்கரை பூங்காவில் "குப்பையை பிரிக்க வேண்டியது - மக்களா? மாநகராட்சியா?" என்ற தலைப்பில் நடைபெறும். வெற்றி பெறும் அணிக்கு ₹10,000 பரிசு வழங்கப்படும். (இதற்கான முன்தேர்வு 13.11.2026 மதியம் 2:30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும்).
மாறுவேடப் போட்டி (Fancy Dress): நவம்பர் 14 மாலை 5:30 மணிக்கு LKG முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெறும்.
வாசகப் போட்டி & கருத்துக்கள் பதிவு: திடக்கழிவு மேலாண்மை, நெகிழி ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் மற்றும் ஆலோசனைகளை healthsection2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
அனைத்துப் போட்டிகளின் நிறைவு விழா வரும் 14.11.2026 அன்று முத்து நகர் கடற்கரை பூங்காவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மேயர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் கிழக்கு (98425 30292), தெற்கு (94435 28621), வடக்கு (80563 47075), மேற்கு (94436 10511) ஆகிய மண்டல எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

