தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகள் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 'வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (05.11.2026) முதல் வரும் 07.11.2026 வரை மூன்று நாட்களுக்குச் செயல்படுத்தப்படுகிறது.

காய்கறித் தொகுப்பின் விவரம்: இத்தொகுப்பில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளான பெரிய வெங்காயம் 500 கிராம் தக்காளி 500 கிராம் கத்திரிக்காய் 250 கிராம் உருளைக்கிழங்கு 250 கிராம் கேரட் 200 கிராம் பீன்ஸ் 200 கிராம் பச்சை மிளகாய் 100 கிராம் எலுமிச்சை 100 கிராம் இஞ்சி 50 கிராம் மற்றும் 400 டு 450 கிராம் அளவிலான தேங்காய் ஆகிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 10 வகையான காய்கறிகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

விற்பனை மையங்கள்:

இச்சிறப்பு காய்கறித் தொகுப்பினைப் பின்வரும் கூட்டுறவு பண்டகசாலைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்:

ஒ.961 தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

ஒ.947 மதுரா கோட்ஸ் கூட்டுறவு பண்டகசாலை

டி சி 26 ஸ்பிக் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை

இ இ 400 துறைமுக சபை ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை

ஒ.1020 தூத்துக்குடி கூட்டுறவு பண்டகசாலை

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திச் சலுகை விலையில் காய்கறித் தொகுப்பினை வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.