தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு "Chutties for Cities - 2026" என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பசுமையான மற்றும் தூய்மையான தூத்துக்குடியை உருவாக்குவதில் மாணவர்களின் கருத்துக்கள் மற்றும் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு முத்துநகர் கடற்கரை பூங்காவில் குழந்தைகள் தின விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன:

கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் வருகிற 11.11.2026 அன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து இப்போட்டிகள் நடைபெறும். மாறுவேடப் போட்டி, வழக்காடு மன்ற இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா ஆகியவை வரும் 14.11.2026 அன்று முத்துநகர் கடற்கரை பூங்காவில் நடைபெறும்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ-மாணவிகளுக்கு "Chutties for Cities - 2026" விருதுகளும், சிறப்பான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இப்போட்டிகளிலும் விழாவிலும் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு கிழக்கு - 98425 30292, தெற்கு - 94435 28621, வடக்கு - 80563 47075, மேற்கு - 94436 10511 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.