தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நடைபயிற்சி நண்பர்கள் குழு சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் அதிகாலை முதல் பூங்காவை சுத்தமாக பராமரித்து வரும் துப்புரவு பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் நடைபயிற்சி குழுவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பரிசு பெற்ற துப்புரவு பணியாளர்கள் நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பண்டிகை காலங்களில் இதுபோன்று தூய்மை பணியாளர்களை கௌரவிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

