தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் நேற்றிரவு திரேஸ்புரம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 5 பேரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய சோதனையில், அவர்களிடம் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் திரேஸ்புரத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் மகன் டேனியல் (28), ரீகன் மகன் மரிய அஜய் (20), மட்டக்கடையைச் சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மரிய அந்தோணி ஆக்னல் (26) மற்றும் கிருஷ்ணராஜ புரத்தைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் மகேஷ் குமார் (45), மகேஷ் குமார் மகன் சஞ்சய் (20) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் தூத்துக்குடியின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.