தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஷேக் அப்துல் காதர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையின் போது, விற்பனைக்காகத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்வம் (47) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 37 கிலோ 630 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

