தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முள்ளக்காடு, குரூஸ்புரம் ஆகிய பகுதிகளில் 15 ஆவது நிதிக் குழு (ம) சுகாதார மானிய நிதியின் கீழ் தலா ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடத்தினை
மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்கள் இன்று (03.11.2026) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, மாவட்ட சுகாதார அலுவலர், தூத்துக்குடி மரு.யாழினி, மாநகர நல அலுவலர் மரு.கணேஷ், மருத்துவர் மரு.தினேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

