நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தின் மாண்பையும் பாதுகாக்கும் வகையில் நெல்லையில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்வதற்காக, பாஜக தேசிய துணைத் தலைவரும், தமிழகப் பார்வையாளருமான ராம் மாதவம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
விமான நிலையத்தில் வந்திறங்கிய ராம் மாதவத்திற்கு, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்வாங்கதன், நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்துபலவேசம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, "ஜனநாயகத்தைக் காப்போம், தேச ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டும்" என்ற முழக்கத்துடன் நெல்லையில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பாஜக கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

