தூத்துக்குடி டி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு, பாஜக மருத்துவப் பிரிவு மாவட்டத் தலைவர் கே. ரவீந்திர பாலாஜி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர்கள் டாக்டர் ருக்மணி, டாக்டர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பொதுச் செயலாளர் ராஜேஷ், மாநிலச் செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், சிவராமன், இசக்கிமுத்து உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி பிரிவு தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இரத்ததான முகாமும் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை பாஜக மருத்துவப் பிரிவு மாவட்டத் தலைவர் கே. ரவீந்திர பாலாஜி சிறப்பாக செய்திருந்தார்.