தூத்துக்குடி அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் சங்கச் செயலாளரும், மாஸ்டர் ஆர்.கே. பறக்கும் படை அகாடமி நிறுவனருமான ரத்னகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இப்போட்டியில், மாவட்டத்தின் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 5 வயது முதல் பல்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இப்போட்டிகளை நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களான ஆனந்த், சரவணகுமார், சுபாஷ் விஷ்ணுகுமார், ஸ்ரீமீனா, தனராஜ், பார்த்திபன், பிரீமீதா, முத்துலட்சுமணன், மரிய புஷ்பம், விக்னேஷ், நிகில் கணேஷ் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். போட்டியில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட 'சாம்பியன் ஆஃப் சாம்பியன்' பட்டங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன், விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர் ஜெகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

முத்துராஜ் மற்றும் ராஜ் மைண்ட் வாய்ஸ் ஸ்போர்ட்ஸ் மாரி செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகள் மற்றும் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.