ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ஸ்ரீநாத், மாலை அணிவித்துப் புகழ்வணக்கம் செலுத்தினார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த வ.உ. சிதம்பரனாரின் ஒப்பற்ற தியாகத்தையும், தமிழர்களின் கடல் வணிகத்தை மீட்டெடுக்க அவர் ஆற்றிய மகத்தான பணிகளையும் நினைவுகூர்ந்து இம்மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக இணைச் செயலாளர் கோல்டன், நிர்வாகிகள் கிஷோர், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.