வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 19) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது எனவும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைத்துக்கொள்வதுடன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

