தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் 'Youth4Jobs Foundation' ஆகியவை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் வரும் நவம்பர் 13-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் மற்றும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ITI, Diploma, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்:

1. சுயவிவரக் குறிப்பு (Resume)

2. ஆதார் அட்டை

3. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை

4. கல்விச் சான்றிதழ்கள்

5. குடும்ப அட்டை (Ration Card)

6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களுக்கு 9281147009 / 9281439353 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம். காது கேளாதோருக்கான வீடியோ கால் உதவிக்கு 9281147010 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.