தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வீரமணிகண்டன் (43). இவர் கார் மூலம் கிராமப் பகுதிகளுக்குச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் கயத்தாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வியாபாரத்திற்காகச் சென்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரிடம் சுடிதார் அளவு பார்ப்பது போல நடித்து, வீரமணிகண்டன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் உடனடியாக இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கயத்தாறு போலீசார், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஜவுளி வியாபாரி வீரமணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.