வடகிழக்கு பருவமழை 2026 முன்னிட்டு பேரிடர் மேலாண்மை முன்எற்பாடாக, தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட செயற்பொறியாளர் நகர் கோட்டம் நகர் தெற்கு உபகோட்டம் பகுதிகளில் 13.10.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
வருகின்ற வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்வதற்காக, தூத்துக்குடி உப்போடை பகுதியில் நீர்மிதத்தடங்களில் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணியில் தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் அலுவலர்கள் மற்றும் அருப்புக்கோட்டையிலிருந்து வரும் சிறப்புக்குழுவினர் பணியாளர்கள் இணைந்து இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் காரணமாக சத்யாநகர், செல்சீனிகாலனி, அருணாநகர், கால்டுவெல் காலனி, இராஜபாளையம், எஸ்.ஆர்.நகர், கணேஷ்காலனி, வள்ளிநாயகபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (13.10.2026) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தூத்துக்குடி மின் பகிர்மானக் கழக நகர் விநியோகச் செயற்பொறியாளர் லெ. சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

