தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (06.11.2026), மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மீனவர்களின் கோரிக்கைகளான கடல் அரிப்பினை தடுக்க தூண்டில் வளைவு அமைத்தல், குடிநீர் பற்றாக்குறை தீர்த்தல், பெரியதாழை மீனவ கிராமத்திற்கு திருச்செந்தூர் முதல் நாகர்கோவில் வரையிலும் வெற்றி பயணம் பேருந்து வசதியினை ஏற்படுத்துதல், மேலும் மீன் எலக்கூடம் அமைத்தல், அரசு ஆரம்ப சுகாரார நிலையம் அமைத்தல், மீனவ கிராமங்களில் தெரு விளக்குகள் மற்றும் CCTV கேமராக்கள் அமைத்தல், புன்னக்காயல் மீனவ கிராமத்தில் முகத்துவாரத்தை ஆழப்படுத்துதல்,

மீன்வளத் துறையின் மூலம் கட்டி வழங்கப்பட்ட இலவச வீடுகளுக்கு பட்டா கோருதல், கடல் ஆம்புலன்ஸ் திட்டம் நிறைவேற்றுதல், அனைத்து மீனவ கிராம பகுதிகளிலும் நடமாடும் டீசல் பல்க் அமைத்தல், நலவாரிய சந்தா தொகையினை உயர்த்துதல், விபத்து மரணம் தொகையினை உயர்த்தி வழங்குதல், புன்னக்காயல் மீனவ கிராமத்தில் தடுப்பணை அமைத்தல்,

மணப்பாடு மீனவ கிராமத்தில் மணல் திட்டுகளை அகற்றுதல் மற்றும் பெரியதாழை மீனவ கிராமத்தினை பேரூராட்சியாக தரம் உயர்த்துதல் ஆகிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வினை தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றிட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் திரு.இளம்வழுதி, தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திருமதி.கு.அ.புஷ்ரா ஷப்னம், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இ.ஆ.ப., அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், அனைத்து மீனவ கிராமங்களில் இருந்து மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவ பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.