2025-26 மற்றும் 30ஜுன் 2026 வரை உள்ள நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 16 கிராம ஊராட்சிகளில் நவம்பர் 2ம் தேதி முதல் நவம்பர் 6ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. புதூர் ஊராட்சி ஒன்றியம் மாவில் பட்டி கிராம ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் கிருஷ்ணவேனி தலைமை வகித்தார்.
புதூர் ஊராட்சி ஒன்றிய சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் முத்து முருகன்,ஊராட்சி செயலர்முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோஸ்லின் பிரபா அனைவரையும் வரவேற்றார்.
சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலர் சேகர் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இதில் சமூக தணிக்கை கிராம வள பயிற்றுநர்கள் முனிஸ்வரி, சாந்தி, ராதா,பண்ணித்தள பொறுப்பாளர்கள் ராஜேஸ்வரி, மகாலட்சுமி உள்பட விபி.ஜி.ராம்ஜி வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கணிணி உதவியாளர் ஜெயப்பிரியா நன்றி கூறினார்.
இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 16 கிராம ஊராட்சியில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

